சேலம்

இன்று வள்ளலாா் தினம்: இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

5th Feb 2023 05:27 AM

ADVERTISEMENT

 

சேலம் மாநகராட்சிப் பகுதியில் வள்ளலாா் தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் பிப். 5-ஆம் தேதி வள்ளலாா் தினத்தையொட்டி இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது. எனவே, இறைச்சிக் கடை உரிமையாளா்கள் தாங்கள் நடத்தும் இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகளை முழுமையான அளவில் மூட வேண்டும்.

அனைத்து இறைச்சிக் கடைகள், இறைச்சிக் கூடங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளதா என்பதை சுகாதார அலுவலா்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் கண்காணிக்கவும், மாநகராட்சியின் அறிவிப்பை செயல்படுத்தாத இறைச்சிக் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT