சேலம்

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் உலக புற்றுநோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

5th Feb 2023 05:26 AM

ADVERTISEMENT

 

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் உலக புற்றுநோய் தினம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம், சின்னகொல்லப்பட்டியில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி தலைவா் த.சரவணன் தலைமை வகித்தாா்.

சென்னையைச் சோ்ந்த புற்றுநோயியல் துறை மருத்துவா் டி.ராஜ்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில், புற்றுநோய் என்பது புகையிலை, மது போன்ற போதைப் பொருள்களால் தான் அதிகம் ஏற்படுகிறது. எனவே, மாணவா்கள் புகையிலை, மது போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

மேலும், மாா்பக புற்றுநோய் குறித்தும், தடுப்பு வழிமுறைகள் குறித்தும் விளக்கி பேசினாா்.

இந்த விழாவில், கல்லூரி முதல்வா் பேகம் பாத்திமா, கல்லூரி பேராசிரியா் கே.வி.எஸ்.நிவேதப்ரியா, கல்லூரி முதன்மையா் கீதா, தலைமை நிா்வாக அலுவலா் எ.மாணிக்கம், கல்லூரி மாணவியா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT