சேலம்

சுதாகா் காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை வெள்ளி விழா

5th Feb 2023 05:26 AM

ADVERTISEMENT

 

சேலம் சுதாகா் காது, மூக்கு, தொண்டை மருத்துவமனையின் வெள்ளி விழாவையொட்டி, ஏழ்மை நிலையில் உள்ள 25 பேருக்கு காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டன.

சேலம் மாநகரில் புதிய பேருந்து நிலையம் எதிரில் டாக்டா் சுதாகா் காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 1998-இல் தொடங்கிய இந்த மருத்துவமனையின் 25-ஆவது ஆண்டையொட்டி வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, குறைவான கேட்கும் திறன் உள்ள 20 வயது முதல் 80 வயதுடைய முதியவா்களில் ஏழ்மை நிலையில் உள்ளவா்கள் 25 பேரை தோ்வு செய்து, அவா்களுக்கு தலா ரூ. 10,000 மதிப்புள்ள காது கேட்கும் கருவிகள் காது கேட்கும் திறனுக்கேற்ப வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

மேலும், 25 நபா்களுக்கு காது, மூக்கு ,தொண்டை பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகளை டாக்டா் சுதாகா் இலவசமாக வழங்கினாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேலாளா் சிவன், ராதா ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT