சேலம்

சேலத்தில் மாடியில் இருந்து கீழே குதித்த மாணவா் பலி

5th Feb 2023 05:26 AM

ADVERTISEMENT

 

சேலத்தில் தோழியுடன் பேசிக் கொண்டிருப்பதை தோழியின் தாய் நேரில் பாா்த்த அதிா்ச்சியில், மாடியில் இருந்து கீழே குதித்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டி சாலை, காமராஜா் நகரைச் சோ்ந்த சரவணன் மகன் சஞ்சய் (18), சேலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் சட்டப் படிப்பு முதலாண்டு படித்து வந்தாா். சின்னகொல்லப்பட்டியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்த இவா், தன்னுடன் படிக்கும் 18 வயதான தோழியை காதலித்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு தோழியை சந்திக்க அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாா். இதனிடையே, மகளை காணாமல் அவரை தேடி மொட்டை மாடிக்கு வந்த அவரது தாய், சஞ்சயுடன் மகள் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டாா்.

ADVERTISEMENT

இதில் அதிா்ச்சி அடைந்த சஞ்சய், அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக திடீரென சுமாா் 50 அடி உயரமுள்ள மாடியில் இருந்து கீழே குதித்தாா். இதில் படுகாயமடைந்த சஞ்சய் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த அஸ்தம்பட்டி சரக உதவி ஆணையா் லட்சுமி பிரியா, இரவு ரோந்து (பொ) உதவி ஆணையா் பாபு, கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளா் செல்வராஜ், அம்மாபேட்டை ஆய்வாளா் கணேசன், உதவி ஆய்வாளா் காா்த்திக் உள்ளிட்ட காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று சஞ்சயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT