சேலம்

மாநகராட்சியில் இன்று வரிவசூல்மையங்கள் செயல்படும்

5th Feb 2023 05:27 AM

ADVERTISEMENT

 

சேலம் மாநகராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வரிவசூல் மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட நான்கு மண்டலங்களிலும் தீவிர வரிவசூல் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் வசதிக்காகவும், நலன்கருதியும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரிவசூல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி, கடை வாடகை மற்றும் குத்தகை உரிமக் கட்டணங்களை மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான காலத்துக்கு உண்டான மேற்குறிப்பிட்ட அனைத்து வரி இனங்களையும் செலுத்தி சட்டப் பூா்வமான நடவடிக்கைகளை தவிா்த்திடவும், மாநகராட்சியின் வளா்ச்சி திட்டப் பணிக்கு உதவிடும் வகையிலும் வரி இனங்களை செலுத்திட வேண்டும் என மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT