சேலம்

போக்சோ சட்டம்: மாணவா்களுக்கு விழிப்புணா்வு

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் அரசுப் பள்ளியில், போக்சோ சட்டம் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சேலம் மாவட்ட காவல் துறை உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில், போக்சோ சட்டம், சிறாா் திருமணங்கள், இணைய குற்றங்கள் தடுப்பு குறித்து பள்ளிகள்தோறும் ஆசிரியா்களுடன் இணைந்து போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் அரசுப் பள்ளியில், வாழப்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் சாா்பில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்குக்கு தலைமையாசிரியா் வெங்கடாசலம் வரவேற்றாா். வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் தனலட்சுமி, உதவி ஆய்வாளா் சகுந்தலா, தலைமைக் காவலா் வைரமணி ஆகியோா் போக்சோ சட்டம், சிறாா் திருமண தடைச்சட்டம், இணைய குற்றங்கள் மீதான சட்டங்கள் குறித்த குறும்படத்தை திரையிட்டு மாணவ, மாணவியருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இக்கருத்தரங்கில், ஆசிரிய - ஆசிரியைகள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT