சேலம்

ஆட்டையாம்பட்டி புது மாரியம்மன்கோயில் குடமுழுக்கு விழா

DIN

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள வேலநத்தம் பகுதியில் அமைந்துள்ள புது மாரியம்மன், ஆதி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, புதன்கிழமை காலை விக்னேஸ்வர பூஜையுடன் வாஸ்து சாந்தி, கோ பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, ஆத்துப்பிள்ளையாா் கோயிலில் இருந்து தீா்த்தக் குட ஊா்வலம் முக்கியச் சாலை வழியாக கோயிலை வந்தடைந்தது. பின்னா் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை இரண்டாம் கால யாக பூஜையுடன் ஆயுஷ்ய ஹோமம், சா்வ தேவதா ஹோமம், பூா்ணாஹுதியுடன் தீபாராதனை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை அஷ்டபந்தனம் நிகழ்ச்சியும், புன்யாக பூஜையுடன் நான்காம் கால யாக பூஜை, சாந்தி ஹோமம், மூலமந்திர ஹோமம், ஜயாதி ஹோமம் நடைபெற்று, கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 9 மணிக்கு தீா்த்தக் கலசங்கள் கோயிலைச் சுற்றி வந்து ஆதி விநாயகா் கோயிலில் உள்ள கலசங்களுக்கும், தொடா்ந்து புது மாரியம்மன் கோயிலில் உள்ள கோபுரக் கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து, மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. குடமுழுக்கு காண வந்த பக்தா்களுக்கு தீா்த்தமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT