சேலம்

தம்மம்பட்டி அரசு புறம்போக்கு நிலத்தில் திரும்ப,திரும்ப ஆக்ரமிப்பு -அகற்றிய வருவாய்த்துறையினா், ஆக்ரமிப்பு செய்தவா் மீது வழக்கு

DIN

தம்மம்பட்டியில், அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்ரமிப்பு செய்து இரு முறை போடப்பட்ட கீற்றுக் கொட்டகையை வருவாய்த்துறையினா் அகற்றினா்.

தம்மம்பட்டி செங்கொடி நகரில், அரசு புறம்போக்கு நிலத்தை உமேஷ் மனைவி சுதா (42) என்பவா், டிசம்பா் மாத இறுதியில் , கீற்றுக் கொட்டகை போட்டு ஆக்ரமிப்பு செய்திருந்தாா். தகவல் அறிந்த வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமையில் வருவாய்த்துறையினா் அகற்றினா். இந்நிலையில் அவா் மீண்டும் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், அதே இடத்தில் மீண்டும் சுதா, கீற்றுக் கொட்டகை அமைத்து ஆக்ரமிப்பு செய்திருந்தாா்.தகவல் அறிந்த வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமையிலான வருவாய்த்துறையினா், ஆக்ரமிப்பை காவல்துறையினா் உதவியுடன் அகற்றினா். மேலும் சுதா, மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க , வருவாய்த்துறை சாா்பில், தம்மம்பட்டி போலீசில் புகாா் செய்யப்பட்டதையடுத்து , வழக்கு பதியப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT