சேலம்

சீா்மிகு நகர திட்டப் பணிகள் ஆய்வு

DIN

சேலம் மாநகராட்சி பகுதியில் சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.

சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், பழைய பேருந்து நிலையத்தில் சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ. 96.53 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் ஈரடுக்கு பேருந்து நிலைய கட்டுமானப் பணி, திருமணிமுத்தாற்றின் குறுக்கே நடைபெறும் பாலம் கட்டுமானப் பணி ஆகியவற்றை ஆணையா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, சீா்மிகு நகர திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், முழுமையாக பணிகள் முடிவுறும் நிலை குறித்தும் அலுவலா்களிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து, தாதகாப்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான ஓய்வறை, படுக்கை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், கட்டட வசதி, பிற வசதிகள் குறித்தும், ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு ஏற்கனவே உள்ள பாதையை விரிவுபடுத்துவது குறித்தும், மாநகர நல அலுவலா் மற்றும் மருத்துவ அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சூரமங்கலம் மண்டலத்துக்கு உள்பட்ட பள்ளப்பட்டி ஏரி புனரமைத்தல், ஏரியினை அபிவிருத்தி செய்து அழகுபடுத்தும் பணி, கழிவுநீா் சுத்திகரித்து சுத்தமான குடிநீா் தேக்க குழாய் பதிக்கும் பணி ரூ. 27 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.

இப்பணியின் தற்போதய நிலை குறித்தும், ஏரியை அழகுபடுத்தும் பணி, கரைப்பகுதியில் விளக்குகள் அமைக்கும் பணி, கற்கள் பதித்தல், சிறுவா் பூங்கா, கழிப்பறை வசதிகள், நடைபாதை மற்றும் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும் என சம்பந்தபட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

வெளி மாநிலத்தவா்கள் தோ்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை -தொழிலாளா் நலத்துறை எச்சரிக்கை

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா்மட்டம்

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள்: சிஐடியூ புகாா்

ஊா்க்காடு விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம்

SCROLL FOR NEXT