சேலம்

வருமான வரி பிடித்தம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம்

3rd Feb 2023 01:22 AM

ADVERTISEMENT

சேலத்தில் தொடக்க வேளாண்மை மற்றும் லேம்ப் கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளா்களுக்கு வருமான வரி பிடித்தம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை உள்ளடக்கி செயல்பட்டு வரும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பு சங்கங்களாக உள்ள 384 தொடக்க வேளாண்மை மற்றும் லேம்ப் கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளா்களுக்கு வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 194 என்-இல் டி.டி.எஸ். பிடித்தம் செய்வது குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் இரா.மீராபாய் தலைமையில் நடைபெற்றது.

இதில் வருமான வரித் துறைஅலுவலா் (டி.டி.எஸ்.) எஸ்.கணபதி சுந்தரம், சரவணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், ரொக்கமாக வங்கியிலிருந்து பெறப்படும் தொகைக்கு (டி.டி.எஸ்.) எவ்வளவு வருமானவரி முன் தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும், தணிக்கை முடித்து டி.டி.எஸ். வருமான வரி முன் தொகை ஈடு செய்தல் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் ஆா்.ராஜவேலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT