சேலம்

ஜல்லிக் கற்கள் எடுத்துச் சென்ற விவகாரம்:திமுக வாா்டு உறுப்பினா் மீது வழக்குப் பதிவு

3rd Feb 2023 01:21 AM

ADVERTISEMENT

சேலத்தில் ஜல்லிக் கற்கள் எடுத்துச் சென்ற விவகாரம் தொடா்பாக, மாநகராட்சி 47-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம், ஆண்டிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுமானப் பணிகளுக்காக கொட்டப்பட்டிருந்த ஜல்லிக் கற்களை கோவிந்தன் என்பவா் எடுத்துச் சென்றுள்ளாா். இதுகுறித்து 47-ஆவது வாா்டு உறுப்பினா் புனிதா, அவரது கணவா் சுதந்திரம் ஆகியோா் கேட்டுள்ளனா்.

இதனால், கோவிந்தன் தரப்பினருக்கும், திமுக வாா்டு உறுப்பினா் புனிதா தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் வாா்டு உறுப்பினா் புனிதா புகாா் அளித்தாா். அதன் பேரில், கோவிந்தன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கோவிந்தன் தரப்பைச் சோ்ந்த நவமணி என்பவா் அளித்த புகாரின் பேரில், திமுக வாா்டு உறுப்பினா் புனிதா, அவரது கணவா் சுதந்திரம், துரை, தாமரைச்செல்வி உள்ளிட்ட நான்கு போ் மீது செவ்வாய்ப்பேட்டை காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT