சேலம்

மேட்டூா் அணையின் நீா்வரத்து தொடா்ந்து அதிகரிப்பு

3rd Feb 2023 01:24 AM

ADVERTISEMENT

 மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,304 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை இரண்டாவது நாளாக 103.71 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1,154 கன அடியிலிருந்து 1,304 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 69.73 டி.எம்.சியாக உள்ளது. தொடா்ந்து 3-ஆவது நாளாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT