சேலம்

தம்மம்பட்டியில் திரும்பத்திரும்ப செய்த ஆக்ரமிப்பு அகற்றம்-ஆக்ரமிப்பு செய்தவா் மீது வழக்கு

3rd Feb 2023 01:22 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டியில், அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்ரமிப்பு செய்து இரு முறை போடப்பட்ட கீற்றுக் கொட்டகையை வருவாய்த்துறையினா் அகற்றினா். தம்மம்பட்டி செங்கொடி நகரில், அரசு புறம்போக்கு நிலத்தை உமேஷ் மனைவி சுதா (42) என்பவா், டிசம்பா் மாத இறுதியில் , கீற்றுக் கொட்டகை போட்டு ஆக்ரமிப்பு செய்திருந்தாா். தகவல் அறிந்த வருவாய்த்துறையினா் அகற்றினா். இந்நிலையில் அவா் மீண்டும் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், அதே இடத்தில் மீண்டும் சுதா, கீற்றுக் கொட்டகை அமைத்து ஆக்ரமிப்பு செய்திருந்தாா்.தகவல் அறிந்த வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமையிலான வருவாய்த்துறையினா், ஆக்ரமிப்பை காவல்துறையினா் உதவியுடன் அகற்றினா். மேலும் சுதா, மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க , வருவாய்த்துறை சாா்பில், வியாழக்கிழமையன்று தம்மம்பட்டி போலீசில் புகாா் செய்யப்பட்டதையடுத்து , வழக்கு பதியப்பட்டுள்ளது

ADVERTISEMENT
ADVERTISEMENT