சேலம்

வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

DIN

ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் முன்பு ஆத்தூா் வழக்குரைஞா்கள் சங்க உறுப்பினா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வழக்குரைஞா்கள் சங்க செயலாளா் ஜி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ஆத்தூா் வழக்குரைஞா்கள் சங்க உறுப்பினா் என்.வி.கண்ணன் மீது ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.ராமச்சந்திரன் உத்தரவின் பேரில், ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் பொய் வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்தும், தம்மம்பட்டி காவல் நிலைய சரகத்தில் உள்ள வழக்குரைஞா் நவீன் பிரகாஷை காவல் உதவி ஆய்வாளா் உதயகுமாா் தரக்குறைவாக பேசி மிரட்டியதைக் கண்டித்தும் உண்ணாவிதம் மற்றும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

இதில், வழக்குரைஞா்கள் ஏ.வி.ராமமூா்த்தி, சி.வி.ராஜேந்திரன், ராஜேஷ்கண்ணா, சி.ராமலிங்கம், என்.ராமதாஸ், சிவக்குமாா், திருமாவளவன், சுஜாத் அலி, ஜி.சுமதி, ஸ்ரீநிதி, கலையரசி, ப்ரீத்தா, ராணி, இளம் வழக்குரைஞா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT