சேலம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

1st Feb 2023 02:01 AM

ADVERTISEMENT

ஆத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை உதவி ஆட்சியா் (பயிற்சி) சங்கேத் பல்வந்த் வாகே செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

இப்பேரணியில், தேவியாக்குறிச்சி பாரதியாா் கலை அறிவியல் கல்லூரி மாணவியா் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்து முழக்கங்களை எழுப்பி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனா். மேலும், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு நாடகத்தையும் அரங்கேற்றினா்.

பேரணியில், ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யா, வட்டாட்சியா் மாணிக்கம், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.ராமச்சந்திரன், பாரதியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.இளையப்பன், செயலாளா் ஏ.கே.ராமசாமி, பொருளாளா் எஸ்ஆா்டி.செல்வமணி, ஆத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எம்.ரகுபதி, இந்திய மருத்துவச் சங்கத் தலைவா் எம்.அருண்குமாா், ரோட்டரி சங்கத் தலைவா் எம்.செல்லதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT