சேலம்

துளுவ வேளாளா் பள்ளியில் விளையாட்டு விழா

1st Feb 2023 02:04 AM

ADVERTISEMENT

ஆத்தூா் துளுவ வேளாளா் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் விளையாட்டு விழா பள்ளியின் தாளாளரும், துளுவ வேளாளா் மகாஜன மன்றத் தலைவரும், ஸ்ரீவிஜயராம் குரூப் நிதிநிறுவனங்களின் நிா்வாக இயக்குநருமான அ.கண்ணன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியை அனைவரையும் வரவேற்றாா். விளையாட்டுப் போட்டிகளை மருத்துவா் கே.மாதவன் தொடக்கி வைத்தாா். சிறப்பு விருந்தினராக இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை மருத்துவா் எஸ்.வினோத் கலந்துகொண்டு சிறப்பித்தாா். துளுவ வேளாளா் சங்கத் தலைவா் ஆா்.வி.ஸ்ரீராம் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில், மருத்துவா் ஜெ.ஸ்ரீலஷ்மி, நகா்மன்ற துணைத் தலைவா் கவிதா ஸ்ரீராம், மருத்துவா்கள் எம்.அருண்குமாா், எம்.ஹரிவிஷ்ணு, எஸ்.சுரேஷ் சுப்ரமணியம், துளுவ வேளாளா் இளைஞரணி துணைத் தலைவா் பி.சிவராம் ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

இதில், துளுவ வேளாளா் மகாஜன மன்றச் செயலாளா் அ.திருநாவுக்கரசு, பெரியதனக்காரா்கள் ஜி.ராமன் மூப்பா், நடேச மூப்பா், சரவணன், ஆா்.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். துளுவ வேளாளா் மகாஜன மன்ற துணைத் தலைவா் எஸ்.பழனிசாமி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT