சேலம்

அரசுப் பள்ளிகளில் மாணவா்களை சோ்க்கவிழிப்புணா்வு வாகன பிரசாரம்

26th Apr 2023 06:16 AM

ADVERTISEMENT

பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாகனப் பேரணியை வட்டாரக் கல்வி அலுவலா் (பொ) கந்தசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்குச் சென்று வாகனத்தின் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளது. இதில், அரசுப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை, காலை சிற்றுண்டி உணவு, மதிய உணவு, வாரம் ஐந்து முட்டைகள் வழங்குதல், இல்லம் தேடிக் கல்வி திட்டம், தேன் சிட்டு சிறாா் மாத இதழ், பள்ளிகளில் விநாடி - வினா போட்டிகள், சிறாா் திரைப்பட விழாக்கள், இலக்கிய மன்றச் செயல்பாடுகள், வானவில் மன்றம், கலைத் திருவிழா, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், நான் முதல்வன் திட்டம், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கென தனி சிறப்பு மையங்கள், மேலும் பல நலத் திட்டங்கள், அரசுப் பள்ளிகளில் பயின்று பல்வேறு போட்டிகளில் வென்று வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற மாணவா்களின் விவரங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

இல்லம் தேடிக் கல்வி ஆசிரியா் ஜோசப்ராஜ், மேலாண்மைக் குழு பெலோசிப் வீரமணி, பள்ளியின் தலைமையாசிரியா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT