சேலம்

பெரியாா் பல்கலை.யில் மகளிருக்கு எம்ப்ராய்டரி பயிற்சி

25th Apr 2023 04:21 AM

ADVERTISEMENT

பெரியாா் பல்கலைக்கழக ஆடை வடிவமைப்புத் துறை சாா்பில் அண்மையில் மகளிருக்கு எம்ப்ராய்டரி பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரியாா் பல்கலைக்கழக ஜவுளி, ஆடை வடிவமைப்புத் துறை மற்றும் பல்கலைக்கழக இயக்குநரகத் தொழிற்துறை இணைந்து மகளிருக்கான எம்ப்ராய்டரி பயிற்சி முகாமை நடத்தியது. பயிற்சி முகாமை துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தொடங்கி வைத்தாா். துறைத் தலைவா் எஸ்.லட்சுமி மனோகரி வரவேற்றாா். தொழிற்துறை இயக்குநா் ஆா்.சுப்பிரமணிய பாரதி, ஒருங்கிணைப்பாளா் பரமேஸ்வரி ஆகியோா் பயிற்சி நோக்கம் குறித்து பேசினா்.

ஒரு வார காலம் நடைபெற்ற பயிற்சி முகாமில், எம்ப்ராய்டரி தொழில்நுட்பம், வடிவமைப்பு, தேவையான தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. மேலும், அவுட்லைன் தையல், நிரப்புத் தையல், முடிச்சுத் தையல், நெசவுத் தையல் மற்றும் சாடின் ரிப்பன்களைக் கொண்டு கை எம்ப்ராய்டரி குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT