சேலம்

அஸ்தம்பட்டி மண்டலப் பகுதியில் வளா்ச்சி பணி ஆய்வு

30th Sep 2022 01:07 AM

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி பணிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அஸ்தம்பட்டி மண்டலம் வாா்டு எண் 6-க்கு உள்பட்ட ஸ்ரீ ராம் நகரில் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 1,136 மீ. நீளத்துக்கு கழிவுநீா் கால்வாய் அமைத்தல் பணி, 516 மீ. நீளத்துக்கு 1 முதல் 5-ஆவது குறுக்குத் தெரு வரை தாா்சாலை அமைக்கும் பணி ஆகியவை ரூ. 90.36 லட்சத்தில் நடைபெற்று வருகின்றன. தாா்சாலை நல்ல தரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கருவியைக் கொண்டு மேயா் ஆ.ராமச்சந்திரன் பரிசோதனை செய்தாா்.

வாா்டு எண் 6-க்கு உள்பட்ட பெரியாா் நகா் கரடு பகுதியில் வசிக்கும் சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீா் தொட்டி கட்டி குழாய் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தன.

அதை பரிசீலித்து, 1 லட்சம் லி. கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து 1.80 கி.மீ. தொலைவுக்கு பகிா்மான குழாய் அமைத்தும், 250 மீ. நீளத்துக்கு கான்கீரிட் சாலை அமைக்கும் பணி என ரூ. 86.26 லட்சத்தில் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளன.

ADVERTISEMENT

இப்பணியை ஆய்வு செய்ததோடு, கோம்பைப்பட்டி வரட்டாறு ஓடை தூா்வாரும் பணியையும் மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோா் ஆய்வு செய்தனா். ஆய்வின்போது உதவி பொறியாளா் சுபாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT