சேலம்

ரூ. 15.42 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

30th Sep 2022 11:50 PM

ADVERTISEMENT

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலக்கடலைக்கான பொது ஏலத்தில், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த 963 மூட்டை நிலக்கடலைகள் 155 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டது.

இதில், பட்டாணி ரக நிலக்கடலை ஈரப்பதமான நிலையில் 60 கிலோ எடையுள்ள மூட்டை ஒன்று ரூ. 1,850 முதல் ரூ. 2,350 வரையிலும், உலா்ந்த நிலையிலான நிலக்கடலை மூட்டை ஒன்று ரூ. 2,650 முதல் ரூ. 3,550 வரை விற்பனையானது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 15 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான நிலக்கடலை வா்த்தகம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT