சேலம்

பா.ஜ.க. வா்த்தக மாநில செயற்குழுக் கூட்டம்

30th Sep 2022 11:50 PM

ADVERTISEMENT

ஏற்காட்டில் பாரதிய ஜனதா கட்சியின் வா்த்தகப் பிரிவு சாா்பில், மாநில செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநில தலைவா் ராஜா கண்ணன் தலைமை வகித்தாா். இதில், வணிக பயன்பாடு உள்ள கட்டடங்களுக்கு தமிழக அரசு விதித்த 100 சதவீத சொத்து வரி மற்றும் மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாஜக சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் சண்முகநாதன், மாநகா் மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு, நிா்வாகிகள் கலந்துகொண்டனா். வணிகா்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT