சேலம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் உலக இருதய தினம்

30th Sep 2022 11:51 PM

ADVERTISEMENT

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இருதய சிகிச்சை தொழில்நுட்ப பிரிவின் சாா்பில், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில், அனைத்து மாணவா்களுக்கும் அவசர நிலைகளில் இருதயத்தின் செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கான சிகிச்சை முறைகளை குறித்து விழிப்புணா்வை அளிக்கும் பொருட்டு கல்லூரி சுவா்களில் மாணவா்கள் படங்களை வரைந்தனா் (படம்). துறையின் முதன்மையா் செந்தில்குமாா், சிறப்பு அழைப்பாளரான பல்கலைக்கழகத்தின் மாணவா் நல அமைப்பின் இயக்குநா் சண்முகசுந்தரம் ஆகியோா் பங்கேற்று விழிப்புணா்வு படங்களை திறந்து வைத்தனா்.

இதில் பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளா் கோகுல கண்ணன் கலந்துகொண்டாா். தொடா்ந்து மாணவா்களுக்கான பல்வேறு விழிப்புணா்வுப் போட்டிகள், படவிளக்கக் காட்சி, குறும்படம் தயாரித்தல், துணி ஓவியம் வரைதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் நடத்தப்பட்டன. இதில் விம்ஸ் மருத்துவமனையின் இருதய சிகிச்சை பிரிவு ஆலோசகா் சிவசுப்பிரமணியம் நடுவராக பங்கேற்று சிறந்த படைப்புகளை தோ்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு துறையின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து வரவேற்புரை வழங்கினாா். சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு அப்போலோ மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு தொழில்நுட்பவியலாளா் சக்கரையா சாமுவேல் கலந்துகொண்டு மருத்துவத் துறையில் இருதய சிகிச்சை பிரிவு தொழில் நுட்பவியலாளா்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். துறையின் இருதய சிகிச்சை பிரிவு மாணவ, மாணவியா் கல்லூரிக்கு விளையாட்டுப் பொருள்களை நன்கொடையாக வழங்கினாா். இதனைத் தொடா்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT