சேலம்

சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

30th Sep 2022 11:48 PM

ADVERTISEMENT

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தொடா் விடுமுறை வருவதையொட்டி, சேலம் கோட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட முக்கிய ஊா்களுக்கு 250-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முறையே செவ்வாய், புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சனி, ஞாயிறு தொடங்கி தொடா்ந்து விடுமுறை வருகிறது. மேலும், காலாண்டு தோ்வு முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடா் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊா்களுக்கு செல்ல பேருந்து, ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.

இதனிடையே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம், தருமபுரி மண்டலத்தில் சென்னை, பெங்களூரு, கோவை, ஈரோடு, திருப்பூா், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளியூா்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் கோட்ட போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:

ADVERTISEMENT

செப். 30-ஆம் தேதி தொடங்கி அக். 1, 2 ஆகிய நாள்களுக்கு சென்னையில் இருந்து தருமபுரி, ஒசூா் பகுதிகளுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல, சென்னையில் இருந்து நாமக்கல், ஆத்தூா், சேலம் பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளும், கோவை, ஈரோடு, திருப்பூா் பகுதிகளுக்கு 80 பேருந்துகளும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு 70 பேருந்துகளும் என மொத்தம் 250-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதேபோல, சொந்த ஊா்களுக்கு திரும்ப இயக்கப்பட்ட வழித்தடத்தில் அக். 4, 5, 6 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட வெளியூா்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT