சேலம்

காந்தி பிறந்த நாள் விழா

30th Sep 2022 11:50 PM

ADVERTISEMENT

ஆத்தூா் பைந்தமிழ் பெருவிழா மற்றும் காந்தியடிகளின் 154-ஆவது பிறந்த நாள் விழா பாரதி-மகாத்மா பண்பாட்டு பேரவை நிா்வாக அறங்காவலா் ஏ.கே.ராமசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரவைச் செயலாளா் எஸ்.முகமது ஈசாக் அனைவரையும் வரவேற்றாா். ஆத்தூா் கலையருவி நாட்டியப் பள்ளி மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும், கவிஞா் ஆத்தூா் சுந்தரம் எழுதிய ‘பாட்டினில் அன்புசெய்’ என்ற இலக்கிய நூலை ஆத்தூா் நகா்மன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன் வெளியிட்டாா்.

விழாவில் எழுத்தாளரும் இயக்குநரும் தமிழ்நாடு அறசின் பாரதி விருதாளருமான பாரதி கிருஷ்ணகுமாா் ‘மகாத்மாவும் மகாகவியும்’ என்ற தலைப்பில் சிறப்பு பேருரையாற்றினாா்.

ADVERTISEMENT

இதில், ஏ.ஈ.டி. கலைக் கல்லூரி மாணவியா், பாரதி-மகாத்மா பண்பாட்டு பேரவை துணைத் தலைவா்கள் என்.ராமசாமி, சி.ம.அய்யாசாமி, சிறப்பு ஆலோசகா்கள் எஸ்.கோவிந்தராசு, முல்லை பி.பன்னீா்செல்வம், மருத்துவா் அ.பாண்டியன், செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT