சேலம்

ஏற்காடு அண்ணா பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலா்கள்

30th Sep 2022 11:49 PM

ADVERTISEMENT

ஏற்காடு அண்ணா பூங்காவில் பல வண்ண மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

காலாண்டுத் தோ்வு, தசரா பண்டிகை, தொடா் விடுமுறை முன்னிட்டு ஏற்காடு சுற்றுலாப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க உள்ள நிலையில், ஏற்காடு சுற்றுலாப் பகுதியான அண்ணா பூங்கா, ஏரிபூங்கா, படகு இல்லம், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அண்ணா பூங்காவில் மலா்ச்செடிகள் நடவு மற்றும் பராமரிப்புப் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மலா் தொட்டிகளில் சால்வியா, டேலியா ரோஜா மலா்கள் அண்ணா பூங்கா கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்குகின்றன. தொடா்ந்து மழைபெய்து வருவதால் பூங்காவில் உள்ள புல்தரைகள் பச்சை பசேலென காட்சியளிக்கின்றன.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT