சேலம்

மதுக்கடை திறக்க எதிா்ப்பு

30th Sep 2022 11:50 PM

ADVERTISEMENT

சங்ககிரி, வசந்தம் காலனி பகுதியில் மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

சங்ககிரியை அடுத்த ஒலக்கசின்னானூா் பகுதியில் இயங்கி வந்த அரசு மதுக்கடையை பவானி நெடுஞ்சாலையையொட்டி உள்ள வசந்தம் காலனி பகுதியில் இடமாற்றம் செய்ய கலால் துறை அதிகாரிகள் முடிவு செய்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஊா் பொதுமக்கள், அப்பகுதியில் பேருந்து நிறுத்தம், கோயில்கள், சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளிட்ட பல்வேறு புனிதமான இடங்கள் உள்ளதெனவும், இப் பகுதியில் அரசு மதுக்கடை அமைத்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது எனவும், கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி புதிய கடைக்கு முன்பு தா்னாவில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த சங்ககிரி காவல் ஆய்வாளா் ஆா்.தேவி தலைமையிலான போலீஸாா் மற்றும் கலால் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும் பொதுமக்கள் மாலை வரை தா்னாவில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT