சேலம்

விழிப்புணா்வு கோலப் போட்டிகள்

30th Sep 2022 11:48 PM

ADVERTISEMENT

சங்ககிரியில் வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்க விழிப்புணா்வு கோலப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்காளா்களின் பெயா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்து கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த சங்ககிரி வருவாய்த் துறையின் தோ்தல் பிரிவின் சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான ரங்கோலி கோலப் போட்டிகள் சங்ககிரியை அடுத்த வீராச்சிபாளையம் விவேகானந்தா மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றன.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் இதில் கலந்துகொண்டு விழிப்புணா்வு வாசகங்கள் கொண்ட கோலம் போட்டனா். இதில் வெற்றிபெற்ற அணிகளுக்கு சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி உதவி வாக்காளா் பதிவு அலுவலரும், வட்டாட்சியருமான எஸ்.பானுமதி பரிசுகளை வழங்கிப் பேசினாா். தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், மாணவியா் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT