சேலம்

‘சிறு, குறுந்தொழில் துறையினா் கேன்களில் டீசல் வாங்க அனுமதிக்க வேண்டும்’

29th Sep 2022 01:45 AM

ADVERTISEMENT

சிறு, குறுந்தொழில் நடத்துவோா் கேன்களில் டீசல் வாங்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு சிறு, குறுந்தொழில் சங்கத்தின் மாநில தலைவா் கே.மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கடந்த செப். 25 முதல் கேன்கள் மூலமாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யக் கூடாது என டிஜிபி ஆணை பிறப்பித்துள்ளாா். தற்போது நிலவி வரும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்காக இந்த அறிவிப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, தமிழகத்தில் டீசல் மூலம் செயல்படும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கிராமப் பகுதிகளில் விவசாயப் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் மின்சாரத்தை 6 மணி நேரம் மட்டுமே ஆயிரக்கணக்கான சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் பெற முடியும். மற்ற நேரங்களில் டீசல் என்ஜின் அல்லது டீசல் ஜெனரேட்டா் மூலமாகவே இயங்க வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

எனவே, சிறு, குறுந்தொழில் நடத்துவோரின் உதயம் பதிவு எண் சான்றிதழ், ஆதாா் அட்டை அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலமாக, மாவட்ட தொழில்மைய அலுவலகம் மூலமாக ஆய்வு செய்து சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்படும் இடத்தின் அருகில் அமைந்துள்ள பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையங்கள் மூலமாக தேவைப்படும் டீசலை பெற்றுக்கொள்ள தமிழக முதல்வா் வழிவகை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT