சேலம்

தேசிய நெடுஞ்சாலை திட்ட மேலாளா் ஆய்வு

29th Sep 2022 01:46 AM

ADVERTISEMENT

ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதிகளில் சென்டா் மீடியன் தடுப்பு ஏற்படுத்தும் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை திட்ட மேலாளா் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆத்தூா் நகராட்சி மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி நிா்வாகம் சாலை நடுவில் பாதுகாப்பு தடுப்பு ஏற்படுத்த மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தன. இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலை திட்ட மேலாளா் சதீஷ் தலைமையிலான குழுவினா் ஆய்வுசெய்து ஆலோசனை மேற்கொண்டனா்.

இதில், நகராட்சி ஆணையா் எம்.வசந்தி, ஆத்தூா் நகா்மன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன், நரசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், நகரச் செயலாளா்கள், நகர மன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT