சேலம்

அரசுப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்டும் பணி தொடக்கம்

29th Sep 2022 01:46 AM

ADVERTISEMENT

தாண்டவராயபுரம் அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கியது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 25 லட்சத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியின் மூலம் சுற்றுச்சுவா் அமைக்கும் பணியினை ஒன்றியக் குழுத் தலைவா் ஆ.பத்மினி பிரியதா்ஷினி தொடக்கி வைத்தாா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜி.செந்தில், தலைமையாசிரியா் பாலமுருகன், ஒன்றியப் பொறியாளா் எஸ்.விஸ்வநாதன், ஒன்றியக்குழு உறுப்பினா் எஸ்.தனலட்சுமி சசிக்குமாா், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT