சேலம்

மேட்டூா் அணை நீா்வரத்து 11,770 கன அடி

29th Sep 2022 01:48 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 11,770 கன அடியாக உள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், புதன்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 11,770 கன அடியாக உள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 900 கன அடி நீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா் இருப்பு 91.42 டி.எம்.சி.யாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், புதன்கிழமை மாலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 118.71 அடியாக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT