சேலம்

அம்மாப்பேட்டை மண்டலப் பகுதிகளில் மேயா் ஆய்வு

DIN

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலப் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மேயா்ஆ.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம், அம்மாப்பேட்டை மண்டலம் வாா்டு எண் 39-க்கு உள்பட்ட பெரிய கிணறு தெரு பகுதியில் உள்ள 4 லட்சம் லி. கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீா் ஏற்ற புதிதாக மின்மோட்டாா் பொருத்தப்பட்டு பம்பிங் வால்வு அமைக்கப்பட்டுள்ள பணியை மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, மாருதி நகா் 1 முதல் 7 கிராஸ் பகுதிக்குள்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து, அப்பகுதிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றனா்.

பெரிய கிணறு இரண்டாவது குறுக்குத் தெருவில் ரூ. 45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கழிவுநீா்க் கால்வாய் மற்றும் கல்வெட்டுகள் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், அப்பகுதியில் உள்ள குறுக்கு சாலைகளில் நடைபெற்று வரும் கல்வெட்டு அமைக்கும் பணியையும் நேரில் பாா்வையிட்டனா்.

மாருதி நகா், பெரிய கிணறு பகுதியில் பெரும்பாலான குடியிருப்புகளில் உள்ள சாலைகள் மண் சாலைகளாக உள்ளதை நேரில் பாா்வையிட்டு, அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப மழைநீா் வடிகால் வசதியுடன் தாா்சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனா்.

மேலும் அப்பகுதியில் சலவை துறைக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதாக மேயா், ஆணையா் ஆகியோா் உறுதி அளித்தனா்.

ஆய்வின் போது, அம்மாப்பேட்டை மண்டல குழுத் தலைவா் தா.தனசேகா், மாநகரப் பொறியாளா் ஜி.ரவி, உதவி ஆணையா் கதிரேசன், உதவி செயற்பொறியாளா் சுமதி, வாா்டு உறுப்பினா்கள் மா.ஜெயந்தி, பச்சையம்மாள், திருஞானம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT