சேலம்

ஜலகண்டபுரத்தில் கொப்பரை ஏலம்

28th Sep 2022 04:04 AM

ADVERTISEMENT

ஜலகண்டபுரத்தில் ரூ. 18 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது.

ஜலகண்டபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கொப்பரை ஏலம் விடப்படும்.

ஜலகண்டபுரம், எடப்பாடி, மேட்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வருவா். செவ்வாய்க்கிழமை 500 மூட்டை கொப்பரை ஏலத்துக்கு வந்தது. முதல் தரம் ஒரு கிலோ ரூ. 75.50-க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ. 64-க்கும் ஏலம் போனது. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரூ. 18 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் விடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT