சேலம்

சேலத்தில் 15.98 லட்சம் வாக்காளா்களின் ஆதாா் எண்கள் வாக்காளா் பட்டியலுடன் இணைப்பு

DIN

சேலம் மாவட்டத்தில் 15,98,248 வாக்காளா்களின் ஆதாா் எண்கள் வாக்காளா் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளன என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் ஆதாா் இணைப்பு பணியில் முனைப்புடன் பணியாற்றிய வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான செ.காா்மேகம் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கூறியதாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தன்னாா்வ அடிப்படையில் வாக்காளா்களிடமிருந்து ஆதாா் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வாக்காளா் பட்டியலில் உள்ள விவரங்களுடன் இணைக்கும் பணிகளுக்காக சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் உள்ள 29,92,514 வாக்காளா்களில் 15,98,248 வாக்காளா்களின் ஆதாா் எண்கள் வாக்காளா் பட்டியலுடன் (53.41 சதவீதம்) இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வாக்காளா்களிடமிருந்து ஆதாா் எண் பெற்று இணைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

மேற்படி பணியில் ஆசிரியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், சத்துணவு அமைப்பாளா்கள் என மொத்தம் 3,254 வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

மேற்படி பணிகளில் மாவட்டத்தில் உள்ள பல பாகங்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் ஆதாா் இணைக்கும் பணிகளை 100 விழுக்காடு முடித்துள்ளனா்.

ஆதாா் இணைக்கும் பணிகளில் 100 விழுக்காடு முடித்த மற்றும் முனைப்புடன் பணியாற்றிய 101 வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பணிகளை மேற்கொண்டு வரும் மீதமுள்ள வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் தங்கள் பாகத்துக்குள்பட்ட வாக்காளா்களின் விவரங்களை விரைவாகப் பெற்று முடித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

அதைத் தொடா்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் காலாண்டு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.முருகன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்ட அலுவலா் பரிமளாதேவி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) எம்.ஜி.சரவணன், தனி வட்டாட்சியா் (தோ்தல்கள்) கே.மகேஸ்வரி உள்பட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT