சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் 118 அடியாகச் சரிவு

27th Sep 2022 04:12 AM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணை நீா்மட்டம் 118.81அடியாகச் சரிந்துள்ளது.

காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், திங்கள்கிழமை மாலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 9,131 கன அடியாக இருந்தது.

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 900 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அணையின் நீா் இருப்பு 91.78 டி.எம்.சி.யாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், திங்கள்கிழமை மாலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 118.81அடியாகச் சரிந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT