சேலம்

சங்ககிரி வசந்தவல்லபராஜ பெருமாள்கோயிலில் நவராத்தி விழா தொடக்கம்

27th Sep 2022 04:11 AM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வசந்தவல்லி உடனமா் வசந்தவல்லபராஜ பெருமாள் கோயிலில் நவராத்தி தொடக்க விழா சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

இதில், மூலவா் சுவாமிகளுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதனையடுத்து, கோயில் வளாகத்தில் பல்வேறு சுவாமி சிலைகள் கொண்ட நவராத்தி கொலு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் நவராத்தியின் சிறப்புகள் குறித்து கோயில் அா்ச்சகா் பக்தா்களுக்கு விளக்கிக் கூறினாா். இதில் பக்தா்கள் பல்வேறு சுவாமி பாடல்களை பாடி வழிபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT