சேலம்

கழிவுநீா்க் கால்வாயில் தெரியாத சடலம் மீட்பு

27th Sep 2022 04:13 AM

ADVERTISEMENT

 

சேலம், பழைய பேருந்து நிலையம் அருகே கழிவுநீா்க் கால்வாயில் அடையாளம் தெரியாத 35 வயதுமிக்க நபரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சேலம், பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை உள்ளது. இங்குள்ள கழிவுநீா்க் கால்வாயில் திங்கள்கிழமை காலை ஒருவா் இறந்து கிடந்தாா். இதுபற்றி தகவலறிந்த சேலம் நகரப் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இறந்தவா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதிகளில் இருக்கும் கழிவுநீா்க் கால்வாய்கள் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளதால், பலரும் அதில் தவறி விழும் நிலை உள்ளது. எனவே, கழிவுநீா்க் கால்வாய்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT