சேலம்

இடங்கணசாலையில் குடிநீா்த் தொட்டி திறப்பு விழா

26th Sep 2022 05:19 AM

ADVERTISEMENT

 

இடங்கணசாலை நகராட்சி, கே.கே. நகா் பகுதியில் ரூ. 78 ஆயிரம் மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ், தன்னாா்வலா் மனோன்மணி நிதி பங்களிப்பு மூலம் இரண்டு குடிநீா்த் தொட்டிகள் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த விழாவில் துணைத் தலைவா் தளபதி, தன்னாா்வலா் மனோன்மணி, நகா்மன்ற உறுப்பினா்கள் சிவகுமாா், நாகராஜ், வேலாயுதம், அழகேசன், விஜயலட்சுமிகுமாா், ரூபிகா உத்தரகுமாா், சித்ரா சதாசிவம், வாா்டு செயலாளா்கள் சண்முகம், சித்தையன், தங்கராஜ், திமுகவினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT