சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம்119.20 அடியாகச் சரிவு

26th Sep 2022 05:20 AM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 119.20அடியாகச் சரிந்துள்ளது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 9,027 கனஅடியாக இருந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 900 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 92.20 டி.எம்.சி.யாக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை மாலை அணையின் நீா்மட்டம் 119.20 அடியாகச் சரிந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT