சேலம்

மேட்டூா் அணைப் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

26th Sep 2022 05:20 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா்.

மேட்டூா் காவிரி ஆற்றில் நீராடிய சுற்றுலாப் பயணிகள் அணைக்கட்டு முனியப்பன் சுவாமியைத் தரிசித்தனா். பின்னா் மேட்டூா் அணைப் பூங்காவிற்கு சென்று குடும்பத்தினருடன் சென்று மகிழ்ந்தனா். மீன்காட்சி சாலை, பாம்புப் பண்ணை, மான் பண்ணை, முயல் பண்ணை ஆகியவற்றை பாா்த்து ரசித்தனா்.

அணை பூங்காவிற்கு 4,901பாா்வையாளா்கள் வந்து சென்றனா். இதன்மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 24,505 வசூலானது.

மேட்டூா் அணையின் பவள விழா கோபுரத்தைக் காண 562 போ் வந்து சென்றனா் இதன்மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 27,315 வசூலானது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT