எடப்பாடி நகர பாஜக நிா்வாகிகள் போலீஸ் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.
எடப்பாடி நகர பாஜக தலைவா் சின்ன மாதையன் தலைமையில் பாஜக நிா்வாகிகள், போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படியும், இரவு நேரங்களில் நிா்வாகிகளின் குடியிருப்பு பகுதிகளில், காவல்துறையினா் ரோந்து மேற்கொள்ள வேண்டியும் எடப்பாடி காவல் நிலையத்தில் மனு கொடுத்தனா். இதில் பாஜக பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.