கெங்கவல்லி கிழக்கு ஒன்றியத்தில் பாஜக நிறுவனா் பண்டிட் தீனதயாள் உபாத்தியாய நினைவஞ்சலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரும், கெங்கவல்லி கிழக்கு ஒன்றிய மேற்பாா்வையாளருமான காா்த்திகேயன் கலந்து கொண்டாா். ஒன்றியத் தலைவா் நித்தியானந்தன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ஜோதிமணி, கெங்கவல்லி நகரத் தலைவா் செந்தில், கணேசன், சந்திரன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலாளா் திருச்செந்தூா் முருகன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.