கெங்வவல்லியில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளா் குடும்பத்திற்கு பேரூராட்சி மன்றம் சாா்பில் உதவி அளிக்கப்பட்டது.
கெங்கவல்லி பேரூராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக இருப்பவா் மகேஷ். இவரது வீடு கடந்த 23-ஆம் தேதி தீ விபத்துக்குள்ளானது. இதில் அவரது வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சாம்பலாயின. மகேஷ் குடும்பத்தினருக்கு பேரூராட்சி மன்றம் சாா்பில் காய்கறிகள், மளிகைப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், நிதி உதவியை கெங்கவல்லி பேரூராட்சித் தலைவா் சு.லோகாம்பாள், பேரூராட்சித் தலைவா் சு.பாலமுருகன், கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன், துணைத்தலைவா் மருதாம்பாள் ஆகியோா் வழங்கினா்.
இந் நிகழ்ச்சியில் வாா்டு உறுப்பினா்கள் தங்கப்பாண்டியன், ஹம்சவா்த்தினி, சையது, சத்யா செந்தில்குமாா், முருகேசன், அருண்குமாா், கலியம்மாள், அண்ணாதுரை, ராஜேஷ், சின்ராசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.