சேலம்

தனியாா் கல்லூரியில் உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

25th Sep 2022 05:51 AM

ADVERTISEMENT

 

தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் பாவேந்தா் கலை, அறிவியல் கல்லூரியில் பாதை தவறும் இளைஞா்களுக்கான உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி கல்லூரி துணைத் தலைவா் பாலு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மனோ ரஷா மனநல மைய இயக்குநரும், உளவியல் மருத்துவருமான மோகன வெங்கடாஜலபதி ‘மயக்கம் தெளியட்டும், மனிதம் செழிக்கட்டும்’ என்ற தலைப்பில் பேசினாா்.

நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினா்களாக தலைவாசல் காவல் ஆய்வாளா் பாஸ்கா், கல்லூரி பொருளாளா் எஸ்.பி.சுப்பிரமணியம், கல்லூரி முதல்வா் ஆகியோா் கலந்து கொண்டாா்கள்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய சிந்தனையாளா் மன்றத்தின் மாநிலச் செயலாளா் என்.மணிகண்டன், மாவட்டத் தலைவா் பி.ஸ்ரீ குமாா், மாவட்டச் செயலாளா் எல்.என்.கிருஷ்ண குப்தா, மற்றும் கல்லூரியின் என்எஸ்எஸ் ஆசிரியா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT