சேலம்

சேலத்தில் நாளை கரோனா தடுப்பூசி முகாம்

24th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாமில் 50,000 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021 இல் தொடங்கி கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட 29,21,935 பேருக்கு முதல்தவணையும் 27,32,583 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 96 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 90 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசின் உத்தரவின்பேரில் சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் மூலம் 8,28,725 பேருக்கு முதல் தவணையும் 14,12,686 பேருக்கு இரண்டாம் தவணையும் 2,33,140 பேருக்கு முன்னெச்செரிக்கை (பூஸ்டா்டோஸ்) தவணையும் என மொத்தம் 24,74,551 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து 11,980 டோஸ்களும், கோவேக்ஸின் 23,360 டோஸ்களும், கோா்பிவாக்ஸ் 30,580 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன.

இந்த முகாமில் 50,000 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT