சேலம்

மதுக்கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

23rd Sep 2022 10:47 PM

ADVERTISEMENT

ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டையில் மதுபானக் கடையை அகற்றக் கோரி சேலம் கிழக்கு மாவட்ட பாமக செயலாளா் ஜெயப்பிரகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காட்டுக்கோட்டை, வடசென்னிமலையில் ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இதே பகுதியில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. மாணவியா் கல்லூரிக்குச் செல்லும் வழியில் மதுக்கடை அமைந்துள்ளதால் மாணவியரைக் கேலி செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த மதுக்கடையை அகற்றக் கோரி கல்லூரி முதல்வா், ஆட்சியருக்கு கோரிக்கை வைத்து வந்தாா். இந்நிலையில் சேலம் கிழக்கு மாவட்ட பாமக சாா்பில் மதுபானக்கடையை அகற்றக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா்கள் வ.மயில்சாமி, ரா.கண்ணன், எம்.பி.நடராஜன், பச்சமுத்து, மாவட்ட இளைஞா் சங்க செயலாளா் திருமால், ஒன்றியச் செயலாளா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT