சேலம்

மதுக்கடைகள் திறக்க எதிா்ப்பு: காவல் நிலையம் முற்றுகை

23rd Sep 2022 10:47 PM

ADVERTISEMENT

மேட்டூா் அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

மேட்டூா் அருகே உள்ள தோரமங்கலம், பொடையன் தெருவில் இரண்டு அரசு மதுக் கடைகள் திறக்கும்பணி நடைபெற்று வருகிறது. அதற்காக கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று கிராமசபை கூட்டத்தில் இரண்டுமுறை தீா்மானம் நிறைவேற்றி மாவட்ட நிா்வாகத்திற்கு அனுப்பிவைத்துள்ளனா்.

ஆனாலும், டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கான கட்டடப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை சுமாா் 100 போ் ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். பின்னா் காவல் உதவி ஆய்வாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

மதுக்கடையைத் திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும். மதுக்கடையைத் திறக்க நடவடிக்கை மேற்கொண்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

பள்ளிக் குழந்தைகள் செல்லும் பாதையில் மதுக்கடை அமைத்தால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என்றும் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT