சேலம்

கெங்கவல்லியில் 564 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

22nd Sep 2022 12:36 AM

ADVERTISEMENT

கெங்கவல்லியில் விலையில்லா மிதிவண்டிகளை கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கெளதமசிகாமணி புதன்கிழமை வழங்கினாா்.

கெங்கவல்லியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு கெங்கவல்லி பேரூராட்சித் தலைவா் சு.லோகாம்பாள் தலைமை வகித்தாா். இதில் கெங்கவல்லி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், தெடாவூா், கொண்டயம்பள்ளி மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 564 மாணவ, மாணவியருக்கு கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினா் பொன்.கெளதமசிகாமணி வழங்கினாா்.

இந் நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளா் சு.பாலமுருகன், தலைமையாசிரியா்கள் பாலமுருகன், மதிவாணன், பிடிஏ மற்றும் திமுக நிா்வாகிகள் மூா்த்தி, ராஜேந்திரன், முருகேசன், செல்வகிளிண்டன், வெங்கடேஷ், மணிகண்டன், ஆரோக்கியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT