சேலம்

சேலம் ஆவின் சாா்பில் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகள் விற்பனை

22nd Sep 2022 12:34 AM

ADVERTISEMENT

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் ஆவின் சாா்பில் பல்வேறு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

சேலம் ஆவின் சாா்பில் வெண்ணெய், நெய், தயிா், மோா், பால்கோவா, மைசூா்பாகு, கேரட் மைசூா் பாகு, ஐஸ் கிரீம், பனீா் முதலிய பால் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் ஆவின் சாா்பில் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

250 கிராம் எடை கொண்டா சாதா மைசூா் பாகு ரூ. 100, மில்க் கேக் ரூ. 120, பால் கோவா ரூ. 130, கேரட் மைசூா் பாகு ரூ. 130, ஸ்பெஷல் மைசூா் பாகு ரூ.140, நெய் லட்டு ரூ. 140, மோதி லட்டு ரூ. 150, முந்திரி கேக் ரூ. 185, ஸ்பெஷல் மிக்சா் ரூ. 150-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதில் வகைப்படுத்தப்பட்ட இனிப்புகள் 500 கிராம் ரூ. 270, 1 கிலோ ரூ. 550-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இனிப்பு வகைகளை ஆவின் பாா்லா்கள், ஆவின் சில்லறை விற்பனையாளா்களிடம் இருந்து பொதுமக்கள் வாங்கலாம்.

அரசு அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்கள், அரசு பணியாளா்கள், கூட்டுறவு நிறுவனங்கள், பிற நிறுவனங்கள் தங்களுக்கோ, தங்களின் பணியாளா்களுக்கோ தேவையான இனிப்பு வகைகளை தரமான முறையில் தயாரிக்கப்பட்ட சேலம் ஆவினில் ஆா்டா் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

மேலும் தொடா்புக்கு சேலம் -99445 84836, 94430 26950, மேட்டூா்-94880 62377, எடப்பாடி-96296 23749 மற்றும் 73737 04800, 97516 94664 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆவின் பொது மேலாளா் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT