சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 21 ஆயிரம் கனஅடியாகச் சரிவு

20th Sep 2022 03:59 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 21 ஆயிரம் கனஅடியாகச் சரிந்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை நொடிக்கு 21 ஆயிரம் கனஅடியாகச் சரிந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 21 ஆயிரம் கனஅடி நீா் திறந்துவிடப்படுகிறது. உபரிநீா்ப் போக்கி வழியாக நீா் திறப்பு, 25 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது. அணையிலிருந்து கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 600 கனஅடி வீதம் நீா் திறந்துவிடப்படுகிறது.

அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT